"பார்முலா 4 கார் ரேஸ் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும்" - உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்!
01:41 PM Feb 13, 2024 IST
|
Web Editor
இதையடுத்து இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கார் பந்தயம் நடத்துவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என அரசு தரப்பிற்கு கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மழை, வெள்ளம் காரணமாக கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டதாகவும், ஜூன் மாதத்திற்கு பிறகு கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெற்றுள்ளதாகவும், ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அந்த இடத்தை கடக்கும்போது ஒலி கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும் எனவும் இதற்கு மருத்துவமனை அனுமதி அளித்துள்ளது எனவும் தெரிவித்தார்.
Advertisement
சென்னை தீவுத்திடலைச் சுற்றி, பார்முலா 4 கார் ரேஸ் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Advertisement
சென்னை தீவுத் திடலைச் சுற்றி பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடை கோரிய வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கார் பந்தயம் நடத்த அரசு 40 கோடி ரூபாயை செலவு செய்வது தவறு என்றும் சட்ட அனுமதின்றி இந்த பந்தயம் நடத்தப்படுகிறது என்றும் இந்த பந்தயம் காரணமாக அரசுக்கு எந்த பலனும் லாபமும் இல்லை என்பதால் இந்த போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்குகளின் மீதான தீர்ப்பை வரும் வெள்ளிக்கிழமை பிறப்பிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
Next Article