For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் நடைபெறவுள்ள ‘ஃபார்முலா 4’ கார் பந்தயம்: டிக்கெட்டுகள் விற்பனை தொடக்கம்!

09:02 PM Nov 27, 2023 IST | Web Editor
சென்னையில் நடைபெறவுள்ள ‘ஃபார்முலா 4’ கார் பந்தயம்  டிக்கெட்டுகள் விற்பனை தொடக்கம்
Advertisement

தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் நடைபெறவுள்ள ஃபார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் கார் பந்தயத்திற்கான டிக்கெட்டுகளின் விற்பனை தொடங்கியுள்ளது.

Advertisement

சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் புரோமோ பிரைவேட் லிமிடட் ஆகியோர் இணைந்து நடத்தும், “ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4” கார் பந்தயம் சென்னையில் வரும்
டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தெற்காசியாவின் முதல் ஃபார்முலா 4 சர்வதேச இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் ஃபார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் இரவு நேர கார் பந்தயங்களுக்கான டிக்கெட்டுகள், விற்பனையை அறிவித்துள்ளது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.

டிக்கெட்டுகள் பெற விரும்புவோர் PAYTM INSIDER இல் ரூ.1699 இல் இருந்து ரூ.16999 வரை பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். Day pass மற்றும் Weekend pass என இரண்டு விதமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு நாளைக்கான டிக்கெட்டுகள் Premium Stand ரூ.3399 (early bird), Grand Stand 1, 2, 3, 4, 5 ரூ.1699 (early bird) மற்றும் ரூ.1999 (phase 1), Gold Lounge ரூ.6799, Platinum Lounge ரூ.10999 (early bird) பிரிவுகளாக விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும் Premium Stand ரூ.5949 (early bird), Grand Stand 1, 2, 3, 4, 5 ரூ.2125 (early bird), Gold Lounge ரூ.11899 , Platinum Lounge ரூ.16999 (early bird) ஆகிய பிரிவுகளில் இரண்டு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மாலை 4 மணி முதல் டிக்கெட்டுகள் பெற்றோர் கார் பந்தயத்தை காண அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement