Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மஹுவா மொய்த்ராவுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

01:50 PM Mar 23, 2024 IST | Web Editor
Advertisement

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கில் அனைத்து அம்சங்களையும் விசாரிக்க சிபிஐக்கு லோக்பால் ஆணையம் கடந்த 15-ம் தேதி உத்தரவிட்ட நிலையில், இந்த சோதனை நடத்தப்படுகிறது. கடந்த 15-ம் தேதி இந்த வழக்கின் விசாரணையின்போது லோக்பால் பிரிவு 20(3)(ஏ)-ன் கீழ் குற்றச்சாட்டுகளை விசாரித்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு ஆணையம் உத்தரவிட்டது.

“மஹுவா மொய்த்ரா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால், குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான சான்றுகள் உள்ளன. எனவே அவர் வகித்த பதவியின் அடிப்படையில் பார்த்தால், குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகவே, உண்மையைக் கண்டறிய ஆழமான விசாரணை தேவை. ஒவ்வொரு மாதமும் விசாரணையின் நிலை குறித்து அவ்வப்போது சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று லோக்பால் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.

இந்த உத்தரவின் தொடர்ச்சியாக கொல்கத்தாவில் உள்ள மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags :
CBIKolkataMahua MoitranewsPoliticsRaidWest bengal
Advertisement
Next Article