மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் கைது !
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
09:16 AM Mar 12, 2025 IST | Web Editor
Advertisement
பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்த ரோட்ரிகோ டுடெர்டே கடந்த 2016-22 காலகட்டத்தில் நாட்டில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரை கொன்று மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
Advertisement
இது தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் ரோட்ரிகோ டுடெர்டேவை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து ரோட்ரிகோ டுடெர்டே, ஹாங்காங்கில் இருந்து பிலிபைன்ஸ் திருப்பிய போது மணிலாவின் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (மார்ச்.11) பிலிப்பைன்ஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.