Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

10:42 AM Oct 25, 2023 IST | Student Reporter
Advertisement

விருதுநகர் அருகே சாலை விபத்தில் சிக்கிய நபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். 

Advertisement

அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் கூட்டம் முடிந்த்தும் சிவகாசியில் உள்ள தனது இல்லத்திற்கு வந்து
கொண்டிருந்த போது விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில் ஒருவர் விபத்தில் சிக்கி சாலையில் கிடந்துள்ளார்.

உடனே இதை பார்த்த ராஜேந்திர பாலாஜி தனது காரில் இருந்து இறங்கி அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து,  பின்னர் தனது அருகில் இருந்த அதிமுகவை சேர்ந்த மருத்துவர் விஜய்ஆனந்த் என்பவர் மூலம் முதலுதவி சிகிச்சை அளித்தார்.

அதன் பின்னர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.  சாலை
விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர்
ராஜேந்திர பாலாஜியை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Tags :
former MinisterhospitalRajendra balajirescued the personRoad accidentVirudhunagar
Advertisement
Next Article