கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் காலமானார்!
1964 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஐ நிறுவிய குழுவில் எஞ்சியிருக்கும் கடைசி உறுப்பினர்களில் அச்சுதானந்தனும் ஒருவராவார். கேரள முதலமைச்சராக அச்சுதானந்தன் 2006 முதல் 2011 வரை பணியாற்றினார்
பக்கவாதத்தால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த அச்சுதானந்தனுக்கு கடந்த ஜூன் 23 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது இதனை தொடர்ந்து, திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சைப் அளிக்கப்பட்டு வந்ததது. இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து இன்று பிற்பகல் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நேரில் சென்று மருத்துவர்களை சந்திதனர். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி பிற்பகல் 3.20 மணிக்கு அச்சுதானந்தன் உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.
நாளை மாலையில் ஆலப்புழாவில் உள்ள வலிய சுடுகாடு தகனக் கூடத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் எனவும் சிபிஎம் கட்சிக் கொடிகளை அரை கம்பத்தில் பறக்க விட வேண்டும் என்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் அறிவுறுத்தி உள்ளார்.