கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவு - பிரதமர் இரங்கல்!
கேரள முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான வி,எஸ். அச்சுதானந்தன் உடல் நலக்குறைவால் இன்று மதியம் காலமானார். இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மறைந்த அச்சுதானந்தனுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் மலையாளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
”கேரள முன்னாள் முதல்வர் திரு. வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் தனது வாழ்நாளில் பல ஆண்டுகளை பொது சேவைக்காகவும், கேரளத்தின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணித்தார்.நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்களாக இருந்தபோது எங்களுடைய தொடர்புகளை நான் நினைவு கூர்கிறேன். இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் உள்ளன”
என்று தெரிவித்துள்ளார்.