கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி குமாரசாமி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!
மாண்ட்யா தொகுதியில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி குமாரசாமி வெற்றி பெற்றார்.
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 18வது நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பாஜக தலைமையிலா தேசிய கூட்டணி 294 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாண்ட்யா தொகுதியில் ஹெச்.டி குமாரசாமி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்ட்யா தொகுதியில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான ஹெச்.டி குமாரசாமி போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கவுடா போட்டியிட்டார். இந்நிலையில் 2,84,620 வாக்குகள் வித்தியாசத்தில் ஹெச்.டி குமாரசாமி வெற்றிப் பெற்றுள்ளார்.
மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட குமாரசாமி ஒட்டுமொத்தமாக 8,51,881 வாக்குகள் பெற்றுள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம், கோலார் தொகுதியிலும் 71,338 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.