"தோனியை விட ரோஹித் கேப்டன்ஷிப் சிறப்பாக இருக்கும்" - முன்னாள் கிரிக்கெட் வீரர் #HarbhajanSingh
தோனியை விட ரோஹித்தின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.
2025 ஐபிஎல் தொடரானது மெகா ஏலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி, ரோஹித் சர்மா கேப்டன்களின் பங்கு பற்றி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் வாரியம் சில நாட்களுக்கு முன்பு 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு சில புதிய விதிகளை அறிவித்திருந்தது.
இந்நிலையில், எம்.எஸ்.தோனி மற்றும் ரோஹித் சர்மா குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். இவரின் கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் ; “எந்த ஏரியா Bro நீங்க.. உங்கள இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லையே…” – #Robot நாயை பார்த்து தலைதெறித்து ஓடிய நிஜ நாய்கள்!
இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியதாவது, “மகேந்திர சிங் தோனி பல ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி உள்ளார். எம்.எஸ்.தோனி அன் கேப்டு வீரராக உள்ளார். குறிப்பாக, இரண்டு உலகக் கோப்பைகளை வென்றுள்ளார் எம்.எஸ்.தோனி. ஐபிஎல் 2025 விதிகள் தோனிக்கு மட்டுமே பொருந்தாது என்று நினைக்கிறேன். இதில் பயனடையும் வகையில் ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற வீரர்கள் சிலர் திரும்பி வரலாம்.
எம்.எஸ்.தோனியும், ரோஹித் சர்மாவும் முற்றிலும் மாறுபட்ட கேப்டன்கள். எம்.எஸ்.தோனியை விட ரோஹித்தின் கேப்டன்ஷிப் மிகவும் சிறப்பாக இருக்கும். ரோஹித் சர்மா சக வீரர்களுடன் விளையாட்டின்போது நன்றாக தொடர்பு கொள்வார்.ஆனால் தோனியின் ஸ்டைல் வித்தியாசமானது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.