ஐசிசியின் தலைவராக பதவியேற்றார் ஜெய் ஷா!
ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2019 அக்டோபர் முதல் பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, இன்று (டிசம்பர் 1) முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார்.
முன்னதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருந்தார். 2020-ம் ஆண்டு நவம்பர் 24ம்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். நவம்பர் 30ம் தேதியுடன் அவரது 4 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் படியுங்கள் : “எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை” – முதலமைச்சர் #MKStalin பதில்!
ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த ஜக்மோகன் டால் மியா, சரத் பவார். என்.சீனிவாசன், ஷசாங்க் மனோகர் போன்றவர்கள் ஐ.சி.சி. தலைமை பதவி வகித்தனர். அந்த வரிசையில் ஜெய்ஷாவும் இணைந்துள்ளார். குறிப்பாக 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ஐ.சி.சி. தலைவரானவர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.