For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்!

09:58 AM Nov 17, 2023 IST | Web Editor
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
Advertisement

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் அதிக அளவில் வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன.

Advertisement

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா,  ஈரான்,  ஈராக்,  இலங்கை, சைபீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து  290 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.  தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி அதிகமாக மழை பெய்த நிலையில் நீர் நிலைகள் நிரம்பி உள்ளதால் பறவைகள் வருவதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. 

இதையும் படியுங்கள்: கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு; பூக்களின் விலை கடும் உயர்வு..!

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து ஆலா பறவைகள் வந்து குவிந்துள்ளன. ரஷ்யா, ஈராக் நாட்டிலிருந்தும் இலங்கையிலிருந்தும் பூநாரைகள் மற்றும் கரண்டி மூக்குநாரை பறவைகள் வந்துள்ளன. சைபீரியாவில் இருந்து உள்ளான் வகையைச் சேர்ந்த பட்டாணி உள்ளான், கொசு உள்ளான், கடற்காகம் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் லட்சக்கணக்கில் வந்துள்ளன. 

பறவைகள் சரணாலயத்தில் கூட்டம், கூட்டமாக அமர்ந்துள்ள பறவைகளை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.  இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம் பிளம்மிங்கோ (பூநாரை) பறவைகள் வந்து குவிந்துள்ளன. 

இதற்கு காரணம் அதற்கு ஏற்ற உணவான பிளாங்டன், லார்வா அதிக அளவில் இந்த சரணாலயத்தில் கிடைக்கின்றன. மேலும் பறவைகள் வருவதற்கு ஏற்ற சூழல் நிலவுவதால் அதிக அளவில் வந்து குவிந்துள்ளன. வழக்கத்துக்கு மாறாக இலங்கையில் இருந்து பூநாரைகளும்,  சிறு குஞ்சுகளும் வந்துள்ளன. 

Tags :
Advertisement