Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Amaran | உலகம் முழுவதும் 900-க்கும் அதிக திரையரங்குகளில் நாளை வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்!

02:19 PM Oct 30, 2024 IST | Web Editor
Advertisement

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் 900-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை கதையாக கொண்டுள்ளது. மேலும் இப்படம் நாளை ( அக்.31ம் தேதி ) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கடந்த சில நாட்களாகவே படக்குழு கலந்துகொண்டு வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ‘ஹே மின்னலே’ என்ற முதல் பாடல் வெளியானது. இந்த பாடல் இதுவரை 16 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதையும் படியுங்கள் : வாய்ப்பை தவறவிட்ட ரொனால்டோ… கிங் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது அல் நஸர்!

இந்த திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் முன்பதிவில் வசூலை வாரி குவித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களை விட அமரன் திரைப்படம் அதிக வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாவதாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்திருந்தார். தற்போது, இன்னும் அதிக திரையரங்குகளில் திரையிட்ட வாய்ப்புள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், சிவகார்த்திகேயனின் எந்த படமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags :
AmaranFilmNews7Tamilnews7TamilUpdatesReleasesivakarthikeyantheatres
Advertisement
Next Article