Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 உயர்வு! ரூ.53,000-ஐ நெருங்கும் தங்கம்!

11:09 AM Apr 06, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை அடைந்து  ஒரு சவரன் ரூ.52,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

சென்னையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் அதிகரித்து வருகிறது.  வரலாற்றில் முதல் முறையாக மார்ச் 28-ஆம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 50,000-ஐ தொட்டது. அதன் பிறகு, ஏப்ரல் 3 ஆம் தேதி தங்கத்தின் விலை ரூ.52,000 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.52,360-க்கும் விற்பனையான நிலையில், நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,510-க்கும், பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.52,080-க்கும் விற்பனையானது.

இதையும் படியுங்கள் : தொடரும் இந்திய மாணவர்கள் மரணம் | ஓஹியோவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.  சென்னையில் இன்று மீண்டும் புதிய உச்சமாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து உள்ளது.  அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,615-க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.52,920-க்கும் விற்பனையாகிறது.

ஆனால், வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.  அதன்படி, வெள்ளி கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.84.90-க்கும்,  ஒரு கிலோ ரூ.100 குறைந்து, ரூ.84,900-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை தொடர் ஏற்றத்தை அடைந்து வருகிறது. தங்கத்தின் தொடர் விலையேற்றம்  சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
GoldGoldpriceGoldPriceTodayGoldRatehikeIncrease
Advertisement
Next Article