Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு 3-வது நாளாக ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள்!

09:53 AM Dec 21, 2023 IST | Web Editor
Advertisement

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3-வது நாளாக ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள், மதுரையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. 

Advertisement

தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக மதுரை மாவட்ட நிர்வாகம்
ஏற்பாட்டில் வெள்ள நிவாரண பொருட்கள் 7 ஹெலிகாப்டர்கள் மற்றும் 2 சிறியரக
விமானங்கள் மூலம் (இந்தில் விமானப்படை ஹெலிகாப்டர்- 6, இந்திய கடலோர காவல்
படை ஹெலிகாப்டர்-1, சிறிய ரக விமானம்-2) வழங்கப்பட்டது.  நேற்று (டிச.20) காலை 06.00 மணியில் ஆரம்பித்து 16 முறை நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு நேற்று (டிச.20) 12,850 கிலோ (தண்ணீர் பாட்டில், பிரட், பால் பவுடர் பிஸ்கட் மற்றும் சில) நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.  இதனிடையே தூத்துக்குடியில் பெய்த மழை மற்றும் வானிலை சரியில்லாத காரணத்தினால் நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்: கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 பேர் உயிரிழப்பு எனத் தகவல்!

எனவே இன்று காலை 8 மணி முதல் 7 ஹெலிகாப்டர் மற்றும் ஒரு சிறிய ரக விமானம் மூலம் நிவாரணம் மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு செல்லும் பணி தொடங்கியது.  மதுரை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு இதுவரை (2 நாட்களாக) 22,850 கிலோ உணவு மற்றும் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் ஒரு சில இடங்களில் உணவுகள் கிடைக்காத சூழல் நிலவுகிறது.   இந்த நிலையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.21) தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா,  மதுரை மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கோவை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா மற்றும் துணை கமாண்டோ விஸ்வநாதன் ஆகியோர் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் அனுப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Heavy rainfallheavy rainsKanyakumari RainsNellai Floodsnews7 tamilNews7 Tamil UpdatesrainfallSouth TN Rainstamil nadu rainsTenkasi RainsThoothukudi Rains
Advertisement
Next Article