“அதற்கு பஞ்சம், அதனால்தான் தனித்து நிற்கின்றேன்” - சீமான் பேட்டி!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் கடலூர் மாவட்ட மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஏப்ரல்.21) நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கலந்தாய்வு கூட்டத்திற்கு முன்னதாக சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும்போது பூமியை சொர்க்கமாய் மாற்றுவேன். சிவன் ஆட்டத்தைப் பார்த்திருப்பீர்கள். சீமான் ஆட்டத்தை இனி பார்ப்பீர்கள். நேர்மைக்கும் உண்மைக்கும் பஞ்சம். அதனால், நான் தனித்து நிற்கின்றேன். தேர்தலில் ஏற்படும் தற்காலிக தோல்விக்காக நிரந்த வெற்றியை விடமாட்டோம். நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் நாங்கள் அல்ல” என்றார்.
“நீட் தேர்வை அமெரிக்க தனியார் நிறுவனம் நடத்துவது ஏன்?” என கேள்வி எழுப்பிய அவர் கூட்டணி சேர்ந்தால் தன்னுரிமை போய்விடும்.. "நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிச் செல்பவர்கள் மற்ற கட்சிக்கு செல்லுங்கள் விஜய் கட்சிக்கு செல்லுங்கள் என்றார். பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு அழைத்தால் செல்வேன். மேடையில் ஏறி பேசுவேன் நான் அங்கிருந்து வந்தவன் தான். அதனால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை”
இவ்வாறு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.