இந்தோனேஷியாவில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் உயிரிழப்பு!
இந்தோனேஷியாவில் மைதானத்தில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் செப்டெய்ன் ரெஹர்ஜா உயிரிழந்தார்.
இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில் பாண்டுங் மற்றும் சுபாங் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி கடந்த பிப்.10 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், மாலை 4.20 மணியளவில், இரு அணி வீரர்களும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சுபாங் அணியை சேர்ந்த 35 வயதான கால்பந்து வீரர் செப்டெய்ன் ரெஹர்ஜா மீது எதிர்பாராதவிதமாக மின்னல் பாய்ந்தது.
இதையும் படியுங்கள் ; ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
இதையடுத்து, சம்பவ இடத்திலேயே கால்பந்து வீரர் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மோசமான வானிலை காரணமாக வானம் கருமேகம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், மைதானத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் மின்னல் தோன்றியதால், இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நிகழ்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு, மைதானத்தில் கால்பந்து வீரர் ஒருவர் மீது மின்னல் தாக்கியதில் அவர் தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.