For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கால்பந்து ஜாம்பவான் பீலே சாதனை முறியடிப்பு! ஸ்பெயின் வீரர் லாமின் யமால் அசத்தல்!

04:16 PM Jul 10, 2024 IST | Web Editor
கால்பந்து ஜாம்பவான் பீலே சாதனை முறியடிப்பு  ஸ்பெயின் வீரர் லாமின் யமால் அசத்தல்
Advertisement

கால்பந்து ஜாம்பவான் பீலே சாதனை முறியடித்து,  மிக இளை வயதில் கோல் அடித்த பெருமையை ஸ்பெயின் அணி வீரர் லாமின் யமால் தட்டிச்சென்றுள்ளார். 

Advertisement

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி,  இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

நான்கு அணிகள் மோதிக் கொள்ளும் அரையிறுதி சுற்றின் முதல் போட்டியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் பிரான்ஸ்-ஐ வீழ்த்தியது.

இதன் மூலம் 2024 யூரோ கோப்பையின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் முதல் அணியாக தகுதி பெற்றது. இந்த போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக ஸ்பெயின் அணி வீரர் லாமின் யமால் தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். இதனால் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது. இதோடு, நேற்றைய ஆட்டத்தில் தனது அணிக்காக கோல் அடித்த யமாலுக்கு 16 வயது 362 நாட்கள் ஆகும். இதன் மூலம் இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை யமால் படைத்துள்ளார்.

முன்னதாக பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் பீலே 1958 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியின் போது வேல்சுக்கு எதிராக தனது 17 வயது 239 நாட்களில் கோல் அடித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement