Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

AI Voice cloning: காண்பதும் கேட்பதும் பொய்! - மோசடியில் இது புதுவகை...

10:18 AM Mar 18, 2024 IST | Web Editor
Advertisement

AI Voice cloning  மூலம் புதிய மோசடியில்  சைபர் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

"கண்ணால் காண்பதும்,  காதால் கேட்பதும் பொய்.  தீர விசாரிப்பதே மெய்" என சொல்லும் அளவுக்கு ஏராளமான தவறுகள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு இணைய வெளியில் வலம் வருகின்றன.  இதில் எது அசல்,  எது பொய் என்பதை நாம் வித்தியாசம் காணவே முடியாத அளவுக்கு நம்மை திகைக்க செய்கிறது இந்த ஏஐ தொழில்நுட்பம்.  அது வீடியோ, ஆடியோ, புகைப்படம் என வேறுபடுகிறது.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது!

ஏஐ குறித்த பேச்சு கடந்த 2022 ஆம் ஆண்டு உலக அளவில் பரவலானது.  ஜிபிடி, மிட் ஜெர்னி, ட்ரான்ஸ்பார்மர்ஸ் போன்ற ஏஐ டூல்கள்/அப்ளிகேஷன்ஸ் இதற்கு உதவுகின்றன. இதையடுத்து,  உலகெங்கிலும் உள்ள ஸ்மார்ட்போன் பயனர்களை சிக்க வைக்க சைபர் குற்றவாளிகள் தொடர்ந்து புதிய புதிய முறைகேடுகளை உருவாக்கி வருகின்றனர். முன்னதாக,  இது OTP மோசடிகள், வீடியோ அழைப்பு மோசடிகள் மற்றும் பல மோசடிகளில் இருந்து சாதாரண மக்கள் பணத்தையும் தனிப்பட்ட விவரங்களையும் இழக்கச் செய்தனர்.

சைபர் கிரைமில் எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும்,  சைபர் குற்றவாளிகள் புதிய AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை சிக்க வைக்க இன்னும் புதிய வழிகளைத் தோண்டி வருகின்றனர்.  அந்த வகையில் தற்போது ஏஐ குரல் குளோனிங் மோசடி நடைபெற்ற வருகிறது.

இந்நிலையில்,   AI குரல் குளோனிங் மோசடி மூலம் குடும்ப உறுப்பினர் ஒருவரின் குரலையும் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.  சமீபத்தில்  இதுபோன்ற ஒரு சம்பவம் இந்தூரில் நடைபெற்றுள்ளது.  இந்தூரை சேர்ந்த சரிதா கன்னாவிற்கு  தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது.  தனது மகள் மிகபெரிய ஆபத்தில்  இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இதையடுத்து,  AI குரல் குளோனிங் மூலம் அவரின் மகளின் குரலில் பேசி ஆள்மாறாட்டம் செய்து அவரது நம்பவைத்துள்ளனர்.  இந்நிலையில், தனது மகளை பத்திரமாக திரும்ப பார்க்க வேண்டுமால் ரூ. 3,00,000 தர வேண்டும் என மிரட்டி உள்ளனர்.  இந்த மிரட்டில் குறித்து சரிதா கன்னா போலீசாரிடம் புகார் அளித்தார்.  அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags :
aiAI voice cloningChillingown kidRiseScams
Advertisement
Next Article