கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகளை இங்கு காணலாம்.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. வெயிலின் தாக்கத்தால் வியர்வை, நீரிழப்பு, வேர்க்குரு, அரிப்பு, தேமல், அம்மை, வயிற்றுப் பிரச்னை போன்றவை ஏற்படும். கோடை காலத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் ஆகியோர் அதிக அளவு பாதிப்படக்கூடிய வாய்ப்புள்ளது.
வெப்பம் வாட்டி வதைப்பதால், உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது. கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது. இதனால், உடலை நீரோற்றமாக வைத்திருக்க உதவும் மோர், சிட்ரஸ் பழங்கள், வாழைப்பழம், வெள்ளரிக்காய், தர்பூசணி, இளநீர், நுங்கு போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அதே சமயத்தில் உடலில் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.
அதன்படி, கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகளை இங்கு காணலாம்:
காபி
காபி உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்குகிறது. அதனுடன் உடலின் வெப்பநிலையை அதிகரிக்க செய்கிறது. இதனால் கோடை காலங்களில் காபியை தவிர்ப்பது நல்லது. முழுவதுமாக தவிர்க்க முடியாவிட்டாலும், காபி பருகும் அளவை குறையுங்கள்.
உப்பு
உணவில் அதிகமான அளவு உப்பை சேர்த்துக்கொண்டால் உடலில் நீரிழப்புக்கு ஏற்படும். உணவு மற்றும் உடலில் இருக்கும் தண்ணீரை உப்பு உறிஞ்சிவிடும். அதிகப்படியான உப்பை சேர்ப்பது சோம்பல், மயக்கம், தலைச்சுற்றல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
உலர் பழங்கள்
உலர்பழங்கள் ஊட்டச்சத்து மிகுந்தவை. இருப்பினும் கோடையில் அவற்றின் பயன்பாட்டை குறைத்துவிடுவது நல்லது. ஏனெனில் உலர் பலங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்துவிடும். அதனுடன் எரிச்சலையும், சோர்வையும் ஏற்படுத்தும்.
வறுத்த உணவுகள்
பஜ்ஜி, வடை, சமோசா மற்றும் பிரெஞ்ச் பிரைஸ் போன்ற எண்ணெய்யில் பொரித்தெடுக்கப்படும் அனைத்து வகையான உணவுகளும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதனுடன் இவை எளிதில் செரிமானம் ஆகாது. இதனால் கோடையில் வறுத்த\பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
மில்க் ஷேக்
மில்க் ஷேக்குகள் கோடையில் விரும்பி அருந்தக் கூடிய பானங்களில் ஒன்றாக உள்ளன.
இருப்பினும், அதிக பால், அதிக சர்க்கரை கொண்ட மில்க் ஷேக்குகளால் நீரிழப்பு ஏற்படும். இவை உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் உள்பட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடும்.
ஊறுகாய்
ஊறுகாயில் அதிகளவு சோடியம் உள்ளதால் நீரிழிவை ஏற்படுத்தும். கோடையில் ஊறுகாயை அதிகமாக உட்கொண்டால் அஜீரணம் ஏற்படலாம்.
கார உணவுகள்
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலங்களில் காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. அவற்றுள் கலந்திருக்கும் கேப்சைசின் என்னும் சேர்மம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது நீரிழப்பு, உடல் சூடு, அஜீரணம், அதிக வியர்வை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பானங்கள் (சோடா)
கோடையில் கார்பனேற்றப்பட்ட பானங்களை பருகுவதற்கு பலரும் விரும்புவார்கள். அதில் அதிக சர்க்கரை கலந்திருக்கும். இது போன்ற பானங்களால் உடலில் விரைவில் நீரிழப்பு ஏற்படும்.
Grilled Meat
கோடை காலத்தில் வெப்பநிலை அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், Grilled
இறைச்சியை உண்பது உங்கள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். மேலும், புற்றுநோயை உண்டாக்கக் கூடும்.
மது (ஆல்கஹால்)
கோடையில் மது அருந்துவதால் அதிக வியர்வை வெளியேறும். உடல் வெப்பநிலையும் அதிகரிக்கும். தொண்டை வறட்சி, தலைவலி போன்றவைகளும் ஏற்படும். மது அருந்துவதால் உடலில் அதிக நீரிழப்பு ஏற்படும்.
இதனால் கோடை காலத்தில் இது போன்ற உணவுகளை தவிர்த்து, பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.