தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு -உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பட்டாசு வெடிக்கப்படி நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தற்போது இருந்தே பட்டாசு விற்பனை களைகட்டி வருகிறது. இந்நிலையில், சுற்றுசூழலுக்கு மாசினை ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை வாங்கி பயன்படுத்தும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், விலை குறைவு என்பதால் பொதுமக்கள் பலரும் அதிக புகை மண்டலங்களை ஏற்படுத்தும் சீன பட்டாசுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகையன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல, தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்கும்படியும், தீக்காயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக முதலுதவி மேற்கொண்டு மருத்துவமனையை அணுகும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.