மக்களே.. பான்-ஆதார் இணைக்க இன்றே கடைசி நாள் - மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க..!
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் அனைவரும் தவறாமல் இணைத்துக் கொள்ளுமாறு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
பான் அட்டையை பயோமெட்ரிக் கொண்ட ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. தொடர்ந்து பான் - ஆதார் இணைப்பை வலியுறுத்தி தொடர் அறிவுறுத்தல்களும் வந்தன. பான் அட்டையை ஆதாருடன் இணைக்க மத்திய அரசு பலமுறை கால அவகாசம் வழங்கி வருகிறது.பான் - ஆதாரை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்காதவர்களுக்கு பின்னர் அபாரதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து பான் ஆதார் இணைப்பில் தொய்வு நிலை இருந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க இன்று வரை வருமான வரித்துறை அவகாசம் நீட்டித்தது. தவறும் பட்சத்தில் அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் எனவும் வருமானவரித்துறை எச்சரித்தது.
இதையும் படியுங்கள் : சூர்யா 44 திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது? - வீடியோ வெளியிட்டு மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!
இந்நிலையில், பான் ஆதாரை இணைப்பது குறித்து வருமான வரித்துறை மீண்டும் ஒரு எச்சரிக்கை ஒன்றை இன்று (மே 28) வெளியிட்டுள்ளது. அதிக விகிதத்தில் வரி விலக்குகளைத் தவிர்க்க வரும் மே 31ம் தேதிக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் (டிடிஎஸ் பொருந்தக்கூடிய விகிதத்தில் 2 மடங்கு) எனவும் வருமான வரித்துறை எச்சரித்தது.
இந்தக் காலக்கெடுவை தவற விட்டவர்கள், அதிக வரி செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவுகள் 206AA மற்றும் 206CC இன் படி அதிக வரி வசூல்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். எனவே பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்க இன்றே கடைசி என்பதால் அனைவரும் தவறாது இணைத்துக் கொள்ளும்படி வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.