Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புத்தாண்டையொட்டி பூக்களின் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி!

01:09 PM Jan 01, 2024 IST | Web Editor
Advertisement

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

ஆங்கில புத்தாண்டு இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு ஆராதனை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.  பெரும்பாலான மக்கள் தங்கள் குலதெய்வ கோவில்களுக்கும், பிரசித்தி பெற்ற கோயில் திருத்தலங்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலையும் கணிசமாக
உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  அதன்படி, மதுரை மாவட்டம்
உசிலம்பட்டி மலர் சந்தையில்

மல்லிகை பூ -  ரூ. 1500

பிச்சி பூ - ரூ. 500

முல்லை - ரூ. 600

மெட்ராஸ் மல்லி - ரூ. 600 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று, பூஜைக்கு பயன்படுத்தக் கூடிய அரளி - ரூ. 200

செண்டு பூ - ரூ. 70

கோழிக்கொண்டை - ரூ. 60

செவ்வந்தி - ரூ. 200

துளசி - ரூ. 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பனிப்பொழிவு காரணமாக கடந்த சில வாரங்களாக பூக்களின் வரத்து குறைவாக இருந்த
நிலையில்,  இன்று புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை இரு மடங்கு
உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags :
FlowersformersMaduraiNews7Tamilnews7TamilUpdatesprice hikeusilampatti
Advertisement
Next Article