Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

01:51 PM Dec 22, 2023 IST | Jeni
Advertisement

தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“தென்தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது.  இந்திய விமானப் படை மூலம் 5 ஹெலிகாப்டர்கள், 70 முறை பயணித்துள்ளன.  கனமழை காரணமாக தென் மாவட்டங்களில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

4 மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது.  வெள்ள பாதிப்புகளை உடனடியாக மத்திய குழு ஆய்வு செய்தது.  பாதிப்பகளை சரி செய்ய மத்திய அரசு உரிய உதவிகளை செய்து வருகிறது.  தேசிய பேரிடர் மீட்பு குழு இதுவரை 5000-க்கும் மேற்பட்டோரை காப்பாற்றியுள்ளது.  தென்மாவட்ட மழை குறித்து டிச.12-ம் தேதியே வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.  தமிழ்நாட்டின் நலனில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர்.

வெள்ள பாதிப்புகள் குறித்து தவறான செய்திகள் பரப்படுகின்றன.  பேரிடர் காலங்களில் மாநில அமைச்சர்கள் களத்தில் இல்லை.  வானிலை ஆய்வு மையம் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையில்லை.  மழைநீர் வடிகால் பணிகளுக்காக வழங்கிய நிதி என்ன ஆனது? 2015 வெள்ள பாதிப்புகளுக்கு பிறகு என்ன கற்றுக்கொண்டீர்கள்?

தென்மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த நேரத்தில்,  முதலமைச்சர்,  INDIA கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றார்.  தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்ட நிதிகளை ஒழுங்காக பயன்படுத்தியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.  மத்திய அரசு மாநில அரசை குறை செல்வதே இல்லை.  நாங்கள் எங்களின் வேலையை செய்து வருகிறோம்.  மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக நாங்கள் உழைக்கிறோம்.

இதையும் படியுங்கள் : 2015 முதல் தமிழ்நாடு சந்தித்த பேரிடர்கள் - மாநில அரசு கேட்டதும், மத்திய அரசு கொடுத்ததும்..!

தென் மாவட்டகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. தேசிய பேரிடர் என்ற வார்த்தையை பயன்படுத்தி யாரும் அரசியல் செய்ய வேண்டாம். மாநில அரசு பேரிடர் என்று கூறினால்,  மத்திய அரசு விதிமுறைப்படி பரிசீலிக்கும்.  முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் கவனமுடன் வார்த்தைகளை கையாள வேண்டும்.  ரூ.6,000 நிவாரண தொகையை வங்கிகள் மூலம் வழங்க வேண்டும். அப்போதுதான் முறையாக நிவாரண தொகை சென்றடைகிறதா என்பது தெரியும்”

இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதுதொடர்பான வீடியோவைக் காண :

Tags :
CentralgovernementCMOTamilNaduDelhifloodsNirmalaSitharamanTNGovt
Advertisement
Next Article