Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வீடுகளை சூழ்ந்த வெள்ளநீர் - முகாம்களுக்கு படையெடுக்கும் நாதல்படுகை, முதலைமேடு திட்டு கிராம மக்கள்!

11:54 AM Aug 03, 2024 IST | Web Editor
Advertisement

காவிரியில் இருந்து வெளியேற்றப்படும் வெள்ளநீர் வீடுகளை சூழ்ந்ததால் சந்தைபடுகை, நாதல் படுகை, முதலைமேடு திட்டு கிராம மக்கள் நிவாரண முகாம்களுக்கு படையெடுத்து வருகின்றனர். 

Advertisement

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள நீர்
முழுவதும் தமிழ்நாடு பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை அதன் முழு
கொள்ளளவை எட்டியதன் காரணமாக வெள்ள நீர் முழுவதும் காவிரி ஆற்றின் வழியே
கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

அந்த நீர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே
சென்று பழையாறு அருகே வங்க கடலில் கலந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான சந்தைபடுகை, நாதல் படுகை, முதலைமேடு திட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஆற்றின்
கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

நாதல்படுகை மற்றும் முதலைமேடு திட்டு கிராமத்திற்கு செல்லும் சாலையை கடந்து
வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் தங்களது உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் கரையில் அமைந்துள்ள தற்காலிக முகாம்களுக்கு வரதொடங்கியுள்ளனர். மாவட்ட
நிர்வாகத்தின் சார்பாக அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது

தண்ணீர் அதிகரிக்கும் என்பதால் தீயணைப்பு மீட்புத்துறை, தமிழ்நாடு பேரிடர்
மீட்பு படையினர், மருத்துவக் குழுவினர், காவல் துறையினர் வருவாய்த் துறையினர்,
உள்ளிட்டோர் பாதிக்கப்படும் கிராமங்களில் முகாமிட்டுள்ளனர். வெள்ள நீர்
அதிகரிக்கும் நிலையில் கிராமங்களில் உள்ள மக்களை பாதுகாப்பாக
வெளியேற்றுவதற்காக அந்தந்த கிராமங்களில் படகுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொண்டுவரப்பட்டுள்ளது.

Tags :
FloodKaverimayiladuduraiRelief Camp
Advertisement
Next Article