For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தாமிரபரணி நீரேற்று நிலையங்களில் வெள்ள நீர்: 4 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?

04:40 PM Dec 20, 2023 IST | Web Editor
தாமிரபரணி நீரேற்று நிலையங்களில் வெள்ள நீர்  4 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
Advertisement

தாமிரபரணி நீரேற்று நிலையங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், குடியேற்று நிலைய மோட்டார்கள் பழுதடைந்துள்ளதாகவும், 4 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள்,  குளங்கள் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட வழிப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், குடியேற்று நிலைய மோட்டார்கள் பழுதடைந்துள்ளன. மேலும் மோட்டார்கள் பழுதால் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே, நெல்லை மாவட்டத்தில் மோட்டார்களை சரி செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் நெல்லையில் முகாமிட்டு பழுது நீக்க பணிகளை ஆய்வு செய்கிறார். தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மோட்டார்கள் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் பழுதுகளை சரி செய்யும் பணி முழுமை பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement