For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருச்செந்தூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண பொருட்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி!

04:38 PM Jan 27, 2024 IST | Web Editor
திருச்செந்தூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண பொருட்கள்   பொதுமக்கள் அதிர்ச்சி
Advertisement

திருச்செந்தூரில் வெள்ள நிவாரணப்பொருட்களை பொதுமக்களுக்கு வழங்காமல் திருமண மண்டபத்தில் பதுக்கி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதி ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. திருச்செந்தூரின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன.

திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, முருங்கை மற்றும் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் மூழ்கின. மக்கள் நிவாரணப்பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டதாக பல புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. பெரும்பாலான இடங்களுக்கு வெள்ள பாதிப்பு நிவர்த்தி செய்தும்கூட நிவாரணப் பொருட்கள் கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள உடன்குடி பேரூராட்சி திருமண மண்டபத்தில் வெள்ள நிவாரண பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. பேரூராட்சி திருமண மண்டபத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2000-க்கும் மேற்பட்ட பிஸ்கட் பாக்கெட்டுகள், அரிசி பண்டல்கள், தண்ணீர் பாட்டில்கள், பிரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கிவைத்துள்ளனர். இதில் பிரெட் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் கெட்டு வீணாகியுள்ளது.

Tags :
Advertisement