For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கீடு! பள்ளிகளை திறப்பதற்கான பணிகள் தீவிரம்!

04:22 PM Dec 10, 2023 IST | Web Editor
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ 1 90 கோடி ஒதுக்கீடு  பள்ளிகளை திறப்பதற்கான பணிகள் தீவிரம்
Advertisement

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

Advertisement

“மிக்ஜாம்” புயலால் முன் எப்போதும் இல்லாத வகையில் இடைவிடாது பெய்த அதி கன மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்புகுள்ளானது.  இதன் காரணமாக 4 மாவட்டங்களில், மாணவர்களின் நலன் கருதி, டிச.4 முதல் டிச.9 வரை தமிழ்நாடு அரசால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதையொட்டி கடந்த 2 நாட்கள் 4 மாவட்டங்களிலும் பள்ளி-கல்லூரிகளை சுத்தப்படுத்தி குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன.  இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டிச.11 (திங்கட்கிழமை) அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.  இவற்றைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த 17 அதிகாரிகள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: சென்னையில் இயல்பை விட அதிகமான மழை பதிவு..!

இப்பணிகளுக்காக சென்னை செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சுமார் ரூ.50 லட்சமும்,  காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுமார் ரூ.40 லட்சமும் ஆக மொத்தம் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இம்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள் நோட்டுப் பத்தகங்கள் சீருடை மற்றும் புத்தகப்பை போன்ற பொருட்களை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் டிச.11 அன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருந்தது.  இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை (டிச.11) தொடங்கவிருந்த தேர்வுகள் டிச.13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறையால் அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : அரையாண்டு தேர்வுகள் – புதிய அட்டவணை வெளியீடு!

Tags :
Advertisement