Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலை!

மதுரையில் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
07:57 PM Jun 09, 2025 IST | Web Editor
மதுரையில் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Advertisement

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மள்ளப்பரத்தை அடுத்த சோமசுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னன். இவர் மள்ளப்புரம் மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் 5 வயது சிறுமியை நேற்று(ஜூன்.09) மாலை பாலியல் தொந்தரவு செய்தாக சிறுமியின் தாயார் இன்று உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Advertisement

புகாரின் அடிப்படையில் சின்னன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட சூழலில், சின்னன் அவரது ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் இருந்த புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசார் சின்னன் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தற்போது இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Child Sexual HarresmentMaduraipocsoSuicide
Advertisement
Next Article