Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

5 மாநில தேர்தல்; ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் - தேர்தல் ஆணையம் தகவல்

04:16 PM Nov 20, 2023 IST | Web Editor
Advertisement

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும், தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதிகள் அக்டோபர் 9 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன.

இதையும் படியுங்கள்:சிறைகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு; சிறைத்துறை தகவல் – ஒப்புதல் பெற தமிழ்நாடு அரசுக்கு கடிதம்

அதனை தொடர்ந்து, தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை பல்வேறு அரசியல் கட்சிகளால் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.1760 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள், மது உள்ளிட்ட போதைப் பொருட்கள், பணம் ஆகியவை தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த தகவலை இந்தியத் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. மேலும், ஐந்து மாநிலங்களில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது ரூ.239 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதை விட இந்த தேர்தலில் 7 மடங்கு அதிகமாக பரிசுப் பொருட்கள், மது, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags :
5stateselectionAmountChhattisgarhElection commissionIndiainformsMadhya pradeshMizoramRajasthanRs1760 croresseizedTelangana
Advertisement
Next Article