For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சிங்கப்பூரில் முதல் திருவள்ளுவர் கலாசார மையம் | #PMModi அறிவிப்பு!

11:55 AM Sep 05, 2024 IST | Web Editor
சிங்கப்பூரில் முதல் திருவள்ளுவர் கலாசார மையம்    pmmodi அறிவிப்பு
Advertisement

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

Advertisement

அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் திருவள்ளுவர் கலாசார மையம் குறித்து அறிவித்தார். மேலும் உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையங்கள் நிறுவப்படும் என மக்களவைத் தேர்தல் வாக்குறுதியில் பாஜக அறிவித்திருந்த நிலையில் அதை நிறைவேற்றும் வகையில்  முதல் திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்பட உள்ளது.

இந்தியாவின் கலாசாரத்தை வெளிப்படுத்த, யோகா, ஆயுர்வேதம், இந்திய மொழிகள், பாரம்பரிய இசை ஆகியவற்றை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த கலாசார மையம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பாஜக வின் தேர்தல் அறிக்கையில், இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்த, யோகா, ஆயுர்வேதம், இந்திய மொழிகள், பாரம்பரிய இசை ஆகியவற்றை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாக, பயிற்சி அளிக்கும் விதமாகவும் உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையங்களை நிறுவுவோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் வளமான ஜனநாயக மரபுகளை ஜனநாயகத்தின் தாயாக நினைத்து மேம்படுத்துவோம் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement