ஆப்கானிஸ்தானுடனான முதல் டி20 போட்டி - இந்தியா அபார வெற்றி.!
ஆப்கானிஸ்தானுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று தொடங்கியது. அதன்படி இந்த தொடரின் முதல் ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. . டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு இரு அணிகளும் தயாராகும் வகையிலான தொடராக இந்த டி20 தொடர் அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி வீரர்களில் காயம் காரணமாக சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடவில்லை. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் - கேப்டன் இப்ராஹிம் ஜர்தான் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது.
ரஹ்மத் ஷா 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்ப 29 ரன்களுக்கு வீழ்ந்தார். அதிகபட்சமாக 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 42 ரன்கள் அடித்த முகமது நபி, கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
20ஓவர்களின்ஓவர்கள் முடிவில் 5விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களாஇ ஆப்கானிஸ்தான் அணி குவித்தது. இந்தியா தரப்பில் முகேஷ் குமார், அக்ஸர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் ஷிவம் துபே 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
முடிவில் ஷிவம் துபே 40 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 60 ரன்கள் குவிக்க 17.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி வெற்றி வாகை சூடியது. ஆப்கானிஸ்தான் பௌலிங்கில் முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்களையும் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 1 விக்கெட் எடுத்தார்.