For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முதல் டி20 போட்டி - இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!

07:11 AM Jan 11, 2024 IST | Jeni
முதல் டி20 போட்டி   இந்தியா  ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை
Advertisement

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் டி20 ஆட்டம் இன்று மொஹாலியில் நடைபெற உள்ளது.

Advertisement

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. அதன்படி இந்த தொடரின் முதல் ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் தொடருக்காக ஆப்கானிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு இரு அணிகளும் தயாராகும் வகையிலான தொடராக இந்த டி20 தொடர் அமையும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஷுப்மன் கில், ரிங்கு சிங், திலக் வர்மா, விராட் கோலி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், அக்சர் பட்டேல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜிதேஷ் ஷர்மா, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், ரவி பிஷ்னாய் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணியை இப்ராஹிம் சத்ரான் வழிநடத்துகிறார். ஹஸ்ரத்துல்லா சசாய், நஜிபுல்லா சத்ரான், அஸ்மதுல்லா ஒமர்சாய், குல்பதின் நைப், கரிம் ஜனத், முகமது நபி, ரஹ்மத் ஷா, ஷராஃபுதீன் அஷ்ரஃப், இக்ரம் அலிகில், ரஹ்மனுல்லா குர்பாஸ், ஃபரீத் அஹ்மத், ஃபசல்ஹக் ஃபரூக்கி, முகமத் சலீம், முஜீப் உர்-ரஹ்மான், நவீன் உல்-ஹக், நூர் அகமது, கைஸ் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள் : அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு வழக்கு – சென்னை உயர்நீதிமன்ற அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது!

சொந்த காரணங்களுக்காக இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். ஜனவரி 14-ம் தேதி நடைபெறும் 2வது ஆட்டத்திலும், 17-ம் தேதி நடைபெறும் 3வது ஆட்டத்திலும் விராட் கோலி விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement