Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்த ஆண்டின் முதல் சூப்பர் ப்ளூ மூன் - எந்தெந்த நாடுகளில் தெரியும்?

10:54 AM Aug 18, 2024 IST | Web Editor
Advertisement

இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன் நாளை தோன்றவுள்ளது. எந்தெந்த நாடுகளில் பக்கவாக தெரியும். இந்தியாவில் சூப்பர் மூன் தெரியுமா என்பதை பார்க்கலாம்.

Advertisement

ப்ளூ மூன் என்றால், நிலா ப்ளு கலரில் இருக்கும் என்று அர்த்தமில்லை. நிலவின் சுற்று வட்டப்பாதை மிக குறைவாக இருந்து, அதே நேரம் பவுர்ணமியாக நிலா காட்சியளித்தால், இதுவே ப்ளூ மூன் அல்லது நீல நிலவு என்பார்கள். சில நேரங்களில் வளிமண்டல நிகழ்வுகள் காரணமாக, சந்திரனின் நிறம் நீல நிறமாக காட்சியளிக்கலாம் அல்லது சிவப்பு ஒளியைத் தடுக்கும் வகையில் குறுக்கே ஏதாவது இருந்தால், நிலா நீல நிறத்தில் காட்சியளிக்கலாம். வழக்கமாக இருக்கும் நிலாவைவிட, 14% அளவுக்கு பெரியதாக இருக்கும். இதற்கு முன்பு கடந்த 2018ல் இப்படித்தான் ப்ளூ மூன் தோன்றியது. அத்துடன் இப்போதுதான், அரிய நிகழ்வு வருகிறது.

இந்த புளூ மூன் எனப்படும் வெள்ளிநிலாவை காண தொலை நோக்கி எதுவும் தேவையில்லை. வழக்கமாக தோன்றும் பவுர்ணமியை விடவும், கூடுதல் வெளிச்சத்துடன் பிரகாசமாக நிலவு தெரியும். இந்த மாத தொடக்கத்தில் நிலவு பவுர்ணமியாக இருந்தபோது பூமியில் இருந்து 3,57,530 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.அது தொடர்ந்து பூமிக்கு பக்கத்திலேயே அதாவது, 3,57,244 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து, மிகப்பெரிய வட்ட நிலா பிரகாசிக்கும்.

சூப்பர் மூன்கள் பொதுவாக ஆண்டிற்கு 3-4 முறை நிகழ்கின்றன. இந்த மாதம், சூப்பர் மூனும் ப்ளூ மூனும் இணையும் அரிதான வானியல் நிகழ்வைக் காண முடியும். இந்த அபூர்வமான வானியல் நிகழ்வை பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். பொதுவாக, ஆகஸ்ட் மாதம் வரும் முழு நிலவுக்கு 'ஸ்டர்ஜன் மூன்' என்று பெயர். இந்த சூப்பர் மூன் ப்ளு ஆகஸ்டில் வருவதால் சூப்பர் ப்ளூ மூன் 'ஸ்டர்ஜன் மூன்' என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த கண்கவர் வான்நிகழ்வு இந்த ஆண்டு தோன்றும் நான்கு சூப்பர் மூன்களில் முதலாவது. அடுத்த சூப்பர் மூன் நிகழ்வுகள் செப்டம்பர் 18, அக்டோபர் 17 மற்றும் நவம்பர் 15 ஆகிய தேதிகளில் வானில் தோன்றுவதைப் பார்க்கலாம். அரிய சூப்பர் ப்ளூ மூன் நாளை (ஆக. 19) தோன்றும். அன்று நிலவின் ஒளி வழக்கத்தை விட 30% பிரகாசமாக இருக்கும். ஆனால் இதற்கு முன்பும், பின்பும் சில நாட்கள் நிலவு அதிக வெளிச்சமாக இருப்பதை காணலாம். உலகின் வெவ்வேறு பகுதிகளில் சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வைப் பார்க்க முடியும்.

Tags :
Blue MoonFull moonNews7Tamilnews7TamilUpdatesSuper Blue Moon
Advertisement
Next Article