For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

10:01 AM Feb 15, 2024 IST | Web Editor
பிரபுதேவா நடிக்கும்  பேட்ட ராப்  திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Advertisement

பிரபு தேவா, வேதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'பேட்ட ராப்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

நடன இயக்குநராக இருந்து நடிகர்,  இயக்குநர் என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வருபவர் பிரபு தேவா.  அண்மை காலமாக படங்களை இயக்குவதை விடுத்து நாயகனாக நடித்து வருகிறார்.  தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொய்க்கால் குதிரை, பாகீரா ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது விஜய்யின் 'கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள் : இந்தியா – இங்கிலாந்து 3வது டெஸ்ட் கிரிக்கெட் : ராஜ்கோட்டில் இன்று தொடக்கம்!

இந்நிலையில்,  மலையாள இயக்குநர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'பேட்ட ராப்' .  இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை வேதிகா நடித்துள்ளார்.  புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.


மேலும், விவேக் பிரசன்னா,  பகவதி பெருமாள்,  ரமேஷ் திலக்,  கலாபவன் ஷாஜோன்,  மைம் கோபி,  ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுச்சேரியில் தொடங்கி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்றது.  இந்த நிலையில், 'பேட்ட ராப்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement