லோகேஷ் தயாரிப்பில் வெளிவரும் முதல் திரைப்படம்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உறியடி படம் மூலம் பிரபலமான விஜய்குமார் நடிக்கும் படத்தை தனது முதல் தயாரிப்பு படமாக அறிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ (GSquad) என்ற தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “5 படங்களை இயக்கிய பின் தற்போது என்னுடைய தயாரிப்பு நிறுவனமான ‘ஜி ஸ்குவாட்’ (GSquad)-ஐ அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கதைச்சொல்லலின் புதிய முறைக்காகவும், இதனை அர்ப்பணித்திருக்கிறேன்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், உறியடி விஜய்குமார் படத்தினை தனது முதல் தயாரிப்பாக அறிவித்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய்குமார், லோகேஷ் கனகராஜ்ஜின் நண்பர் என்பதும் குறிப்பிடதக்கது.
இப்படம் ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உறியடி மற்றும் அதன் இரண்டாம் பாகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய அப்பாஸ் இந்த படத்தை இயக்குகிறார். கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். சென்னையில் படப்படிப்பு தொடங்கி நடத்தப்பட்டது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த சூழலில் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.