For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பட்டாசு ஆலை வெடிவிபத்து - உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

சிவகாசி அருகே நேற்று ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
10:55 AM Feb 20, 2025 IST | Web Editor
பட்டாசு ஆலை வெடிவிபத்து   உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ 4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
Advertisement

சிவகாசியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 19.02.2025 அன்று மாலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், திருத்தங்கல், திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த சுரேஷ் (38) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பால்பாண்டி (31)  என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”  என்று குறிப்பிடபட்டுள்ளது.

Tags :
Advertisement