பட்டாசு ஆலை வெடி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் பலரும் வேலை செய்து வந்தனர். இதனிடையே பட்டாசு ஆலையில் ஜூலை 1 ம் தேதி காலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகு ராஜா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.