Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#FireAccident | திடீரென தீப்பற்றி எரிந்த அரசு பேருந்து… பயணிகளின் நிலை என்ன?

10:37 AM Oct 24, 2024 IST | Web Editor
Advertisement

கோவையில் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து
கொண்டிருந்தது. பேருந்தை சுரேஷ் என்ற ஒட்டுநர் ஓட்டி வந்த நிலையில் 40க்கும்
மேற்பட்ட பயணிகள் அதில் பயணம் செய்தனர். தொடர்ந்து, பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது, இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. இதனைக் கண்டதும் சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு, பயணிகளை பேருந்திலிருந்து இறங்கும்படி அறிவுறுத்தினார். இதனையடுத்து, பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரின் இறங்கினர்.

பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கிய சில நிமிடங்களில் தீ மளமளவென எரிந்து பேருந்து முழுவதும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமானது. டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
CoimbatorefireFire accidentgovt busnews7 tamilpassengersPollachitamil naduTN Govt
Advertisement
Next Article