Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிங்கப்பூர் கொடியுடன் கூடிய சரக்கு கப்பலில் தீ விபத்து - மீட்பு பணிகள் தீவிரம்!

அரபிக் கடல் பகுதியில் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய சரக்கு கப்பலில் தீ விபத்துள்ளானதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
02:37 PM Jun 09, 2025 IST | Web Editor
அரபிக் கடல் பகுதியில் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய சரக்கு கப்பலில் தீ விபத்துள்ளானதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
Advertisement

கேரள மாநில விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து அரபிக் கடலில் சென்ற லைபீரியா கொடியுடன் கூடிய MSC ELSA 3 சரக்கு கப்பல் நடுகடலில் சாய்ந்து கடந்த மே மாதம் 24 ஆம் தேதி  விபத்துக்குள்ளானது.  184 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல் அன்றைய தினம் சரியாகமதியம் 1.25 மணியளவில் கொச்சியிலிருந்து தென்மேற்கு பகுதியில் சுமார் 38 நாட்டிக்கல் மைல் தூரத்தில், 26 டிகிரி சாய்ந்து விபத்துள்ளாகி மூழ்கியது. இந்த சம்பவத்தில் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் மீட்பு பணியினாரால் மீட்கப்பட்டனர். இதை அம்மாநில அரசு பேரிடராக அறிவித்தது.

Advertisement

இந்த நிலையில் மீண்டும் அரபிக் கடல் பகுதியில் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 650 கண்டெயினர்களுடன் கொழும்புவிலிருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த இந்த கப்பல் இன்று(மே.09) அதிகாலை பேப்பூர் கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 40 நாட்டிகல் தொலைவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


இச்சம்பவம் குறித்து முதல் தகவல் காலை 10.30 மணியளவில் கிடைத்ததாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் அடுத்தடுத்த மீட்பு பணிகள் விமானங்கள் மூலம் நடைபெற்று வருகிறது. மேலும் இதுவரை கிட்டத்தட்ட அந்த கப்பலின்  22 பணியாளர்களை மீட்க கடற்படை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

Tags :
arabian seaCargo ShipFire accidentKerala
Advertisement
Next Article