உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து!! - 3 பெட்டிகள் எரிந்து நாசம்...
06:59 AM Nov 16, 2023 IST | Web Editor
Advertisement
உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு 3 பெட்டிகளில் எரிந்து சேதமடைந்தன.
Advertisement
உத்தரப்பிரதேசத்தில் உள்ள சராய் போபட் ரயில் நிலையம் வழியாகச் டெல்லி - தர்பங்கா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் : 02570) சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக ரயிலின் 3 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த ரயிலின் எஸ்1 பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து மற்ற பெட்டிகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. ரயிலில் தீ விபத்தை தொடர்ந்து உடனடியாக பயணிகள் இறக்கிவிடப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து வட மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் கூறுகையில், “ரயில் தீ விபத்தில் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.