Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2.33 மணி நேர பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு! 

2.33 மணி நேர பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவு செய்தார்.
12:26 PM Mar 14, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி கூடியது. அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றாலும், சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசித்த ஆளுநர் உரை அவைக் குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11-ம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையும் இடம்பெற்றது.

Advertisement

அத்துடன் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (மார்ச் 14) மீண்டும் கூடியது. தொடர்ந்து, 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள், துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரம் உள்ளிட்டவை குறித்து அறிவித்தார்.

பட்ஜெட்டில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. "Inequality is a choice, but we can Choose a different path..!" பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டியை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை தொடங்கினார். இந்த நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 2.33 மணி நேர பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.

Tags :
Budget 2025CMO TAMIL NADUDMKMK Stalinnews7 tamilNews7 TamilUpdatesTamil Nadu BudgetThangam thennarasuTN AssemblyTN Budget2025TN Govt
Advertisement
Next Article