For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகவுள்ள படங்கள்....

05:38 PM Dec 07, 2023 IST | Web Editor
ஓடிடி தளத்தில் இந்த வாரம் வெளியாகவுள்ள படங்கள்
Advertisement

ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விக்ரம் பிரபுவின் ரெய்டு, கார்த்தியின் ஜப்பான், கூச முனுசாமி வீரப்பன் ஆகியவை இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.

Advertisement

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கடந்த நவம்பர் 10-ம் தேதி திரைக்கு வந்தது. 2014-ம் ஆண்டு சித்தார்த், லக்ஷ்மி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் இப்படத்திற்கு கிடைத்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி உள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இந்த படம் நாளை (டிச. 8) நெட்ஃப்ளிக்ஸ் ஓடி‌டி தளத்தில் வெளியாகவுள்ளது.

அறிமுக இயக்குநர் கார்த்தி இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் ரெய்டு திரைப்படம் உருவாகியுள்ளது‌. இந்த 'ரெய்டு' படத்திற்கு பிரபல இயக்குனர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். வெங்கட் பிரபு, ஸ்ரீ திவ்யா மற்றும் புதுமுகம் அனந்திகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 6 வருடங்களுக்கு பிறகு நடிகை ஸ்ரீ திவ்யா இந்த படத்தில் நடித்துள்ளார். சாம் சி எஸ் இசையில் கடந்த நவம்பர் 10-ம் தேதி திரைக்கு வந்த இந்த திரைப்படம் நாளை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.நடிகர் கார்த்தி-இயக்குனர் ராஜு முருகன் கூட்டணியில் 'ஜப்பான்' திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த நவம்பர் 10-ம் தேதி வெளியான இந்த திரைப்படம் நடிகர் கார்த்தியின் 25-வது படமாக இருந்தாலும் படுதோல்வியை சந்தித்தது. அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 11-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இது தவிர, அறிமுக இயக்குநர் ஷரத் ஜோதி இயக்கத்தில், வீரப்பனின் வாழ்க்கையை மையப்படுத்திய தொடர் ‘கூச முனுசாமி வீரப்பன்’ என்ற பெயரில் தயாராகி உள்ளது. இது ZEE5 ஒடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

Tags :
Advertisement