" சமூக வலைதள விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுவதில்லை " - இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு
07:39 PM Nov 20, 2023 IST
|
Web Editor
இதன் பின்னர் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் அசுரன், வட சென்னை ஆகிய படங்கள் மிகுந்த வரவேற்பினை பெற்றது. அதிலும் அசுரன் திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சூரி நாயகனாக நடித்த விடுதலை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் எனவும் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.
" 7 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதள விமர்சனங்கள் மூலம் படத்தின் வசூல் பாதிக்கவில்லை. அது மிகவும் குறைவாக இருந்தது. தற்போது அது சற்று கூடுதல் ஆகியிருக்கிறதே தவிர இப்போதும் அதன் சதவிகிதம் குறைவுதான். பொதுமக்களிடன் இந்த சமூக வலைதள விமர்சனங்கள் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மாறாக இயக்குநர்களிடம் பாதிப்பை ஏற்படுத்துகிறது" என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
Advertisement
" சமூக வலைதளங்களால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் படத்தின் வசூல் முழுவதுமாக பாதிக்கப்படுவதில்லை " என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
Advertisement
இயக்குநர் பாலு மகேந்திராவின் பயிற்சி பட்டரையில் இருந்து வந்தவர்களில் ஒருவர்தான் இயக்குநர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பொல்லாதவன் படத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு . இதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய ஆடுகளம் தேசிய விருது பெற்றது. மேலும் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படமும் மக்களிடம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் இயக்குநர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்ததாவது..

Next Article