For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் 'Mr.X' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

03:58 PM Jun 30, 2024 IST | Web Editor
ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும்  mr x  திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Advertisement

நடிகர் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும், Mr.X திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினர். 

Advertisement

நடிகர்கள் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து பிரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'Mr.X'. விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர் திரைப்படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க முதல் கௌதம் கார்த்திக் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சரத்குமார், மஞ்சு வாரியார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கும் இந்த திரைப்படத்துக்கு தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதையும் படியுங்கள் : “டாஸ்மாக்கில் தரம் இல்லை என்பதை அமைச்சரே ஒப்புக்கொள்கிறார்” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு உகாண்டா, செர்பியா உள்ளிட்ட நாடுகளில் நடந்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. திரைப்படத்திற்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் வெளியாகின. ஆர்யாவின் காட்சிகள் ஏற்கனவே படம்பிடிக்கப்பட்டு மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. அண்மையில் திரைப்படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைத்துள்ளது. கடைசி நாள் சூட்டிங்கில் இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. படத்தைக் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement