For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அஜர்பைஜானில் படப்பிடிப்பு நிறைவு - துபாய் விரைந்த ‘விடாமுயற்சி’ படக்குழு!

07:07 AM Nov 11, 2023 IST | Web Editor
அஜர்பைஜானில் படப்பிடிப்பு நிறைவு   துபாய் விரைந்த ‘விடாமுயற்சி’ படக்குழு
Advertisement

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் அஜர்பைஜான் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு துபாய் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையே, ஐரோப்பாவில் பைக் டூர் சென்ற அஜித்குமார் சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இதுகுறித்த வீடியோக்களும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களும் வைரலாகின.

சமீபத்தில் நடைபெற்ற சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுபாஸ்கரனிடமே பத்திரிகையாளர்கள் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் நிலவரம் குறித்து கேட்டதில், விரைவில் விடாமுயற்சி ஆரம்பமாகும் என அறிவித்து அஜித் ரசிகர்களை ஹேப்பியாக்கினார்.

இப்படியான சூழ்நிலையில்,  சந்திரமுகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லைக்கா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கலந்துகொண்டு, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படுவதாகவும் தங்களுக்கு இப்படம் முக்கியமானது என்றும் கூறியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் அபுதாபியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு முக்கிய வில்லனாக சஞ்சய் தத்தும் மற்றொரு வில்லனாக நடிகர் ஆரவ்வும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்த ஆரவ் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைதொடர்ந்து இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, அபுதாபியில் கடந்த அக். 4ம் தேதி தொடங்கியது.

இதற்காக அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜான் சென்றனர். படப்பிடிப்பு துவங்கி பத்து நாள் கூட ஆகாத நிலையில் இஸ்ரேல் நாட்டில், போர் தொடங்கி நடந்து வந்தது. ஆனால் அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாத வண்ணம் படப்பிடிப்பு நடைபெற்றதாகத் தெரிகிறது. 

இந்நிலையில் அஜர்பான் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு துபாய் சென்றுள்ளதாகவும் அங்கு சண்டை காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Tags :
Advertisement