For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரஜினிகாந்த் நடிக்கும் #Vettaiyan இசை வெளியீட்டு விழா - எப்போது தெரியுமா?

12:08 PM Sep 16, 2024 IST | Web Editor
ரஜினிகாந்த் நடிக்கும்  vettaiyan இசை வெளியீட்டு விழா   எப்போது தெரியுமா
Advertisement

‘வேட்டையன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 20-ம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தற்போது இறுதிகட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்டையன் படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ சில நாள்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள் : #LegendSaravanan நடிக்கும் 2-வது படத்திற்கான படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடக்கம்!

இந்த நிலையில், திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement