நாளை வெளியாகும் #AMARAN திரைப்பட ஃபர்ஸ்ட் சிங்கிள் - படக்குழு அறிவிப்பு!
'அமரன்' திரைப்படத்தின் Heart of AMARAN நாளை வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21-ஆவது திரைப்படம் ‘அமரன்’. இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதனை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் “மேஜர் முகுந்த் வரதராஜன்” என்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.இத்திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : “காடுன்னா வெறும் மரம், செடி, கொடி மட்டும் கெடையாது” – ‘#Thandakaaranyam’ ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் கொடுத்த படக்குழு!
தீபாவளி வெளியீடாக திரைக்கு வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், டப்பிங் மற்றும் இறுதிகட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது. சமீபத்தில் 'அமரன்' படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், 'அமரன்' திரைப்படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் Heart of AMARAN நாளை வெளியாகும் என வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.