AC காற்றுக்காக சண்டை.. நின்று போன திருமணம்.. புதிய குற்றவியல் சட்டத்தில் அபராதம்.. - ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாம சோதனை!
ஏர்கூலருக்காக நடந்த சண்டையில் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து நடைபெற்று பேச்சுவார்த்தையில் மணமக்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் புதிய குற்றவியல் சட்டத்தில் அபராதம் விதித்து காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
திருமணம் என்பது மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்று . மதம் , சாதி, பண்பாடு, கலாச்சாரம் என மனிதர்களிடையே பல முரண்பாடுகள் இருந்தபோதிலும் திருமணம் எனும் சடங்கு மட்டும் அனைத்து தரப்பிலும் உண்டு. ஆனால் திருமணத்தின் வகைகளும், முறையும் மட்டும் மாறுபடும்.
திருமணம் என்பது நமது இந்தியக் கலாச்சாரத்தில் மிகப்பெரும் கொண்டாட்டமாகவும், ஒரு தவிர்க்க முடியாத சடங்காகவும் பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கான கொண்டாட்டங்கள் ஒரு திருவிழாவிற்கு நிகராக பெண் அல்லது மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் இருந்து தொடங்குகிறது.
உத்திரபிரதேச மாநிலம் புல்சந்தர் மாவட்டத்தில் உள்ள சித்பர்காவுன் எனும் கிராமத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் மணமேடையில் மணமக்கள் இருவரும் அமர்ந்திருக்க அங்குதான் பிரச்னை ஆரம்பத்துள்ளது. திருமணப் பந்தலில் ஏர்கூலர் வைக்கப்பட்டிருக்க அதன் அருகில் யார் உட்காருவது என தொடங்கிய சண்டை மணமக்கள் வீட்டாரிடையே கைலகலப்பாக மாறியது. சண்டை முற்றவே இதனைத் தொடர்ந்து கோபத்தில் திருமணம் வேண்டாம் என மணமகள் மறுத்துவிட்டார்.
இரு தரப்பினரையும் காவல்துறையினர் சமரசம் செய்ய முயன்றனர், இருப்பினும் காவல்துறையால் ஒரு தீர்வு எட்ட முடியவில்லை. நீண்ட சலசலப்புக்குப் பிறகு, அப்பகுதியில் அமைதியைக் குலைத்ததாக இரு தரப்பினருக்கும் ரூ.151 அபராதம் விதித்த காவல்துறையினர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவின்படி பிரிவு 126 சட்டத்திற்கு விரோதமாக கட்டுப்பாடு விதித்தாக கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அப்பகுதியின் காவல்நிலைய அதிகாரி ஜெய்ஷ்வால் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் மணமகன் ஹுக்கும் சந்த் ஜெய்ஸ்வால், அவரது உறவினர் பங்கஜ், மணமகளின் தந்தை நந்த் ஜி குப்தா மற்றும் அவரது சகோதரர் ராஜேஷ் குப்தா ஆகியோர் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்படத்தக்கது.