For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ParisOlympics2024 நடுவானில் போர் விமான அணிவகுப்பு நடத்தி வரவேற்பு - பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வீரர்களுக்கு தைவான் அரசு கௌரவம்!

07:07 AM Aug 14, 2024 IST | Web Editor
 parisolympics2024 நடுவானில் போர் விமான அணிவகுப்பு நடத்தி வரவேற்பு   பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வீரர்களுக்கு தைவான் அரசு கௌரவம்
Advertisement

ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்று நாடு திரும்பிய  தங்களது நாட்டு வீரர்களுக்கு வானத்திலேயே போர் விமான அணிவகுப்பு நடத்தி தைவான் அரசு கௌரவித்துள்ளது.

Advertisement

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்றுவந்த 33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நிறைவடைந்தது. பாரீஸ் நகரில் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டி, 17 நாள்கள் நடைபெற்று,  ஆகஸ்ட் 11ம் தேதி இரவு நிறைவடைந்தது. அமெரிக்கா 126 பதங்களுடன் பதக்கப்பட்டியிலில் முதலிடத்தை பிடித்தது. சீனா, ஜப்பான் நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

போட்டியில் மொத்தம் 204 நாடுகளின் அணிகள் பங்கேற்றன. பதக்கப் பட்டியலில் மொத்தம் 90 நாடுகள் இடம் பிடித்தன. இதில் அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என 91 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும், ஜப்பான் மூன்றாவது இடத்தையும், போட்டியை நடத்திய பிரான்ஸ் 5-ஆம் இடத்தையும் பிடித்தது.

இந்தியா தரப்பில்  1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் 71 ஆவது இடத்தையும் பிடித்தது. அர்ஜென்டீனா, எகிப்து, துனீசியா தலா 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கங்களை பெற்றுள்ளது. பாகிஸ்தான் நாடு ஒரே ஒரு தங்கம் மட்டுமே எடுத்து 62வது இடத்தை பிடித்தது.

ஒலிம்பிக் பங்கேற்ற நாடுகளின் வீரர்கள் போட்டி முடிவடைந்த நிலையில் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளனர். ஒவ்வொரு நாட்டு வீரர்களுக்கும் வித்தியாசமான முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வகையில் தைவான் நாட்டைச் சார்ந்த வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்று நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் விமானத்தில் பயணம் செய்து வந்து கொண்டிருந்தபோது தைவான் அரசு வானத்திலேயே போர் விமான அணிவகுப்பு நடத்தி அவர்களை வரவேற்றது.

தைவான் நாடு ஒலிம்பிக்கில் 2 தங்கம், 5 வெண்கலம் என மொத்தம் 7பதக்கங்களை வென்றுள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்த முறைதான் தைவான் வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement