போர் விமானங்கள் விவகாரம் - தொடரும் பாகிஸ்தானின் முரணான பதில்கள்!
இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் எல்லைகளில் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்தியா நேற்று(மே.07) ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்தியாவின் தாக்குதலுக்கு நேற்று இந்தியாவில் 15க்கும் மேற்பட்ட பகுதியில், பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியது. இதில் இதுவரை ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் மற்றும் 16 பொதுமக்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே போல் பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் தொடர் தாக்குதலில் இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை தாகியதாக முன்பு பாகிஸ்தான் கூறியது. ஆனால், இது குறித்து CNN ஊடகத்தின் நேரலையில் பங்கேற்ற பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், இந்தியாவின் சமூக ஊடகங்கள் கூறியதாக பின்வாங்கினார். ஆனால், இதுவரை தங்களது விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக இந்தியா உறுதிபடுத்தவில்லை.
இந்த நிலையில் சீன போர் விமானங்களை தாக்குதலின்போது பயன்படுத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்து வந்தது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் பெய்ஜிங்கிலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர், “இந்த விஷயம் பற்றி எங்களுக்குத் தெரியாது” என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் தரப்பில் இருந்து போர் விமானங்கள் குறித்த முன்னுக்கு பின் முரணான பதில்கள், தற்போது விவாதங்களை எழுப்பியுள்ளது.